பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள வெளிநாடுகள் உதவி செய்யாது - சம்பிக்க ரணவக்க
கடனுதவியை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதே இலங்கை எதிர்நோக்கி வரும் பிரதான நெருக்கடி என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதுவரை நாட்டை ஆட்சி அனைத்து அரசாங்கங்களுடன் கடனுதவிகளை பெற்றதுடன் அவற்றின் மூலம் பழைய கடன்களை திருப்பி செலுத்தி வந்தன.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது அதனை விட முற்றிலும் மாறுபாடான நிலைமை.
நாட்டின் தற்போதைய அரசாங்கத்திற்கு வெளிநாட்டு சந்தையில் மாத்திரமல்ல உள்நாட்டு சந்தையிலும் கடன் கிடைப்பதில்லை.
நிதி சந்தைக்கு நாடு திறக்கப்படாததன் நெருக்கடியின் அடிப்படையில் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக நாடு வங்குரோத்து அடையவுள்ளது.
கோவிட் நெருக்கடியில் இருந்து மீள உலக நாடுகள் உதவினாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தற்போதைய அரசாங்கத்திற்கு வெளிநாடுகள் உதவி செய்யாது.
இதனால், கோவிட் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. அரசாங்கத்தின் நிதி தொடர்பான செயற்பாடுகள் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam