பிரித்தானியாவில் எரிபொருள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு - வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பெற்றோல் விலையால் பெற்றோல் நிலையங்களில் எரிபொருள் திருடப்படுவது அதிகரித்து வருவதாக தொழில்துறை நிபுணர்களின் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் பெற்றோல் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது, வழக்கமான குடும்பக் காரில் பெற்றோல் நிரப்புவதற்கான செலவு £100ஐத் தாண்டியது.
இங்கிலாந்தில் 1,000 கேரேஜ்களுடன் பணிபுரியும் Forecourt Eye, ஜனவரி முதல் பெற்றோலுக்கு பணம் செலுத்தாமை 39 வீத அதிகரிப்பு இருப்பதாகக் கூறியது.
இதில் வாகன ஓட்டிகள் பணம் செலுத்தாமல் செல்வது அல்லது தங்கள் பணப்பையை மறந்துவிட்டதாகக் கூறுவதும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் திருட்டு யாருக்கும் நல்லதல்ல
இந்நிலையில் "அதிகமாக திருட்டு நடப்பதால் இது யாருக்கும் நல்லதல்ல" என்று பணம் செலுத்தாதவர்களைக் கண்டுபிடித்து கண்காணிக்கும் டிஜிட்டல் கடன் மீட்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஃபிஷர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸிலிருந்து மாதாமாதம் திருட்டு அதிகரித்து வருவதாகவும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 19.5 வீதம் அதிகரித்துள்ளதாகவும், இது எரிபொருள் விலை உயர்வுடன் தொடர்புபடுத்துவதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் 4.5 வீதம், ஏப்ரலில் 8 வீதம் மற்றும் மே மாதத்தில் 7 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் அமெரிக்க டொலருக்கும் ஸ்டெர்லிங்கிற்கும் இடையிலான பலவீனமான மாற்று விகிதத்தால் ஏற்பட்ட விநியோகப் பிரச்சினைகளால் எரிபொருளின் விலை ஏற்றம் குறைந்துள்ளது.
எரிபொருளை நிரப்பிவிட்டு ஓடும் நபர்கள்
"இந்த நேரத்தில், மக்கள் தங்கள் பணப்பையை மறந்துவிடுவதாகக் கூறுவதை நாங்கள் காண்கிறோம். சிலர் அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர் என நிக் ஃபிஷர் தெரிவித்துள்ளார்.
"எரிபொருள் நிரம்பியவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் ஒரு காபி வாங்கிச் செல்கிறார்கள், பின்னர் எரிபொருளுக்குப் பணம் கொடுக்காமல் போகிறார்கள். பிறகு £30 [எரிபொருளை] நிரப்பிவிட்டு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் முதல் வாரத்தில், எரிபொருளுக்கு பணம் செலுத்தப்படாத சம்பவங்கள் 22 வீதம் அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆயில் செக்யூரிட்டி சிண்டிகேட் (BOSS) தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்திற்கும், அதிக எரிபொருள் திருட்டு குற்றச் சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பதில் "சந்தேகமில்லை" என BOSSஇன் நிர்வாக இயக்குனர் Claire Nichol தெரிவித்துள்ளார்.