பிரித்தானியாவிற்கு இது உண்மையான இருண்ட நாள் - எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு
பிரித்தானியாவில் ஒரு சராசரி குடும்பக் காரில் பெற்றோல் நிரப்புவதற்கான செலவு முதல்முறையாக £100ஐ எட்டியுள்ளது.
55 லிட்டர் தொட்டியை நிரப்புவதற்கான செலவு பெற்றோலுக்கு £100.27 ஆகவும், டீசலுக்கு £103.43 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில், RAC மோட்டாரிங் குழு இதை "உண்மையான இருண்ட நாள்" என்று அழைத்தது.
RAC மற்றும் அதன் போட்டியாளரான AA ஆகியவை எரிபொருளின் மீதான VAT அல்லது எரிபொருள் வரியை மேலும் குறைக்குமாறு வலியுறுத்தியது. எனினும், ஏற்கனவே வாழ்க்கைச் செலவைக் குறைக்க 37 பில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளதாக திறைசேரி தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் பெற்றோல் விலைகள் வீட்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றன, எரிசக்தி கட்டணங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையும் இப்போது உச்சத்தில் உள்ளது.
விரைவில் எரிபொருள் விலை லிட்டருக்கு £2 ஆக உயரும்
பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு எண்ணெய் விநியோக அச்சத்திற்கு வழிவகுத்த பின்னர் எரிபொருள் விலை உயரத் தொடங்கின.
RACஇன் தகவலடபடி, ஒரு லிட்டர் அன்லெடட் பெற்றோலின் சராசரி விலை இப்போது 182.31p ஆகவும், டீசலுக்கு 188.05p ஆகவும் இருக்கின்றது. இருப்பினும், இது விரைவில் லிட்டருக்கு £2 ஆக உயரும் என மோட்டார் குழு எச்சரித்துள்ளது.
இது குறித்து RAC எரிபொருள் செய்தித் தொடர்பாளர் சைமன் வில்லியம்ஸ் கருத்து வெளியிடுகையில்,
"எரிபொருள் விலை தினசரி அடிப்படையில் புதிய சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், சராசரி அளவிலான குடும்பக் காரை நிரப்புவதற்கான செலவு மூன்று இலக்கங்களை எட்டும் என்று நாட்டு மக்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
"மேலும் ஒரு வரிக் குறைப்பு அல்லது VAT இல் தற்காலிகக் குறைப்பு என்பது ஓட்டுநர்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்டுவதைத் தவிர வேறு வழியில்லை." என்று தெரிவித்துள்ளார்.