பிரித்தானிய பிரதமர் நாட்டு மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான தகவல்
பிரித்தானிய மக்கள் வீடுகள் வாங்கும் நடவடிக்கையை எளிதாக்குவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார்.
மக்கள் வீடுகளை வாங்குவதை எளிதாக்குவதாகவும், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதாகவும் பிரித்தானியா பிரதமர் உறுதியளித்துள்ளார்.
தனது தலைமைதுவதற்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் பின்னர் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.
திங்கட்கிழமை தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் பின் தனது பதவியை உறுதி செய்த பிரதமர் தனது முதல் கொள்கை உரை நேற்று ஆற்றியிருந்தார்.
மக்கள் உறுதியாக நம்பலாம்
இதன் போது குடும்பங்களின் மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தணிக்க நிதியை வழங்குவதற்கான திறனை ஏற்படுத்துவதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார்.
அதிகரிக்கும் விலை உயர்வை சமாளிக்க தேவையான கருவிகள் எங்களிடம் உள்ளன. உலகளாவிய நெருக்கடி வலுவானது. ஆனால் எங்கள் இயந்திரங்கள் வலிமையானவை என பிரதமர் கூறியுள்ளார்.
இது விரைவாகவோ அல்லது எளிதாகவோ நடக்காது என்றாலும், விடயங்கள் சிறப்பாக இருக்கும், ஆரோக்கியமான பொருளாதாரம் கொண்ட வலுவான நாட்டிலிருந்து நாங்கள் வெளிப்படுவோம் எனவும் மக்கள் உறுதியாக நம்பலாம் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், வீடுகளை வாங்குவதற்கு உதவுவதற்கான பிரதமரின் யோசனைகள் தோல்வியடைந்துள்ளதாக நிபுணர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.