இந்தோனேசியாவில் மின்னல் தாக்கி களத்தில் பலியான கால்பந்து வீரர்

Dharu
in விளையாட்டுReport this article
இந்தோனேசியாவில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின்போது ஆடுகளத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் களத்தின் நடுவிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தோனேசியாவின் FLO FC கழகம் மற்றும் FBI கழகம் ஆகிய அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நேற்று (11.02.2024) நடைபெற்றது.
இந்த போட்டியின் நடுவே கால்பந்து வீரர் ஒருவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் மைதானத்தில் விழுந்துள்ளார்.
Watch on TikTok
சமூக ஊடகங்களில் பரவும் காணொளி
இந்நிலையில், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கால்பந்து வீரரை மின்னல் தாக்கும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிரேசிலின் கால்பந்து மைதானத்தில் நடந்த ஒரு போட்டியின் போது மின்னல் தாக்கியதில் 21 வயது வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் காயமடைந்தனர்.
அத்தோடு, 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் - ஜார்க்கண்டின் மாவட்டத்தில் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் 19 வயது இளைஞன் மின்னல் தாக்கி உயிரிழந்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
