யாழில் தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி
யாழில் தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெற்றுள்ளது.
குறித்த போட்டியானது, வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
போட்டியின் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மேடை நோக்கி வரவேற்கப்பட்டு வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
முதலாவது கோல்
இந்த போட்டியில் வடமராட்சி அணியை எதிர்த்து கட்டைக்காடு சென்மேரிஸ் அணி விளையாடியுள்ளது.
ஆட்டத்தின் ஆரம்பமே விறுவிறுப்பாக ஆரம்பமாக சில நிமிடங்களில் சென்மேரிஸ் அணி தனது முதலாவது கோலை பதிவு செய்ய ஆட்டம் மேலும் சூடுபிடித்துள்ளது.
வெற்றிக் கிண்ணம்
ஆட்டத்தின் இறுதிவரை மிக வேகமாக ஆடிய வடமராட்சி அணி, இலங்கை இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ் - சிங்கள புத்தாண்டு வெற்றிக் கிண்ணத்தை 3-1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தமதாக்கியுள்ளனர்.
முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் இலங்கை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |