தமிழர் தேசத்தின் தார்மீக கோபத்தினை வெளிக்காட்டும் உண்ணாநிலை போராட்டங்கள்!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்தக் கோரி தாயகத்திலும், புலத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாநிலைப் போராட்டங்கள், ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தினை கூர்மைப்படுத்தி வருகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
லெப்.கேணல் தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்த நல்லூரின் வீதியில் பல்கலைகழக மாணவர்களால் தொடங்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம், லெப்.கேணல் தியாகி திலீபனை முன்தொழுது பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம், தென்தமிழீழத்தில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக'பொத்துவில் முதல் பொதலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில்தொடங்கியுள்ள சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் ஆகியன தமிழர் தேசத்தின்நீதிக்கான வேட்கையினை மீண்டும் மீண்டும் பன்னாட்டு சமூகத்துக்கு பறைசாற்றி வருகின்றன.
குறிப்பாக பிரித்தானியாவில் மனித உரிமைகளுக்கான போராடும் பாரப்பரியத்தையும், இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிவேண்டி அயராது பாடுபடும் ICCPG அமைப்பின் செயலதிபாராகவும் உள்ள அம்பிகை செல்வகுமார் அவர்களது சாகும் வரையிலானஉணவுத்தவிப்பு போராட்டத்தின் ஆத்மதுணிச்சல் போற்றுதலுக்குரியது.
ஐ.நாவின் தற்போதைய ஆணையாளர், முன்னாள் ஆணையளர்கள், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள், தமிழினத்தின் மீது நடந்த போர்குற்றங்கள், மானிடத்துக்குஎதிரான குற்றங்கள், இனப்படுகொலைக்கு இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதற்கு, இலங்கையை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு தமது அறிக்கையில் கோரியிருந்தனர்.
ஆயினும் இலங்கை தொடர்பாக முகன்மை குழு நாடுகளால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப (zero draft resolution) பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பூச்சிய (zero) வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சியபொறுப்புக்கூறலையே வெளிப்படுத்தியுள்ளது என்ற தார்மீக கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த அறவழி அகிம்சைப் போராட்டங்கள் அமைந்துள்ளன.
இவைகள் சர்வதேச சமூகத்தினை நமது பக்கம் திரும்பிப்பார்க்கும் வகையில் மக்கள் போராட்டத்துக்கு வழிகோலும்வகையில் அமையும் என்ற நம்பிக்கையோடு நாம் அனைவரும் தோழமையோடு ஒன்றுபட்டு நீதிக்கும், அரசியல் இறைமைக்குமாய் போராடுவோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.