இலங்கை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
உணவகங்களுக்கு சென்று உணவைப் பெற்றுக் கொள்வதில் இலங்கை மக்கள் தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.
மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் பிரதான நகரினை அண்டியப் பகுதிகளில் வாழும் மக்கள், தொழிலுக்குச் செல்வோர் என பலரும் உணவங்களில் உணவினைப் பெற்றுக் கொண்ட நிலையில் தற்போது அந்த நிலை மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது உணவகங்களில் உணவுப் பொதியொன்றின் விலை 450 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது.
மக்களின் தயக்கம்
மேலும், கோதுமை மாவின் விலை விலை அதிகமாக உள்ளதால், அதனுடன் சார்ந்த உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் உணவகங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், நாட்டின் பல பாகங்களில் கோழி இறைச்சியின் விலை 1600 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன் காரணமாக கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதிலும் பொதுமக்கள் தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது