அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைக் குறைப்பு
உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தக் கொள்வனவின் போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவின் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மொத்தக் கொள்வனவின் போது சிவப்பு பருப்பு கிலோ ஒன்றுக்கு 14 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலை 282 ரூபாவாகும்.
அத்தோடு, வெள்ளை சீனி மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்று 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 269 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விலை குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை இன்று முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
