கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து மாவு சார்ந்த உணவு பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்புக்குழு தலையிட்டு உடனடியாக விலையைக் கட்டுப்படுத்துவதற்கான சூத்திரத்தை உருவாக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
உதாரணமாக, கொத்து ரொட்டியின் விலை 700 ரூபாய்க்கு மேல் இருப்பதால் கடைக்காரர்களுக்கு வரம்பற்ற இலாபம் கிடைக்கப்பெறுகின்றது.
கொத்து ரொட்டியின் விலை
எனவே குறைந்தபட்சம் ஒரு கொத்து ரொட்டி பொதியின் விலை 450-500 ரூபாய்க்குள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், ரோல், பஜ்ஜி மற்றும் பிற பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்யலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெங்காயம், உருளைக்கிழங்கு, சீனி மற்றும் கோதுமை மாவின் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உணவு பொருட்களின் விலை குறைக்கப்படாத நிலையில் பழைய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனவே தொடர்புடைய பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
