கர்ப்பிணி தாய்மார்களுக்கு உணவுப் பொதி! விளக்கமளிக்கும் அமைச்சர்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு உணவுப் பொதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தீர்மானம்
இது தொடர்பில் மேலும் கூறுகையில், போசாக்கு மட்டம் குறைவாகவுள்ள 160,200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண் தலைமைத்துவ குடும்பங்களில் நிலவும் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தம், கோவிட் காலம் ஆகியவற்றின் பின்னர் போசாக்கு குறைபாடு மோசமடைந்துள்ளதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டினார்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri