மனித நுகர்விற்கு பொருத்தமற்ற பலசரக்கு கடைகள் மீது திடீர் பரிசோதனை
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் மீது திடீர் பரிசோதனை சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்யை தினம் (13.06.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பொருட்கள்
இந்த நடவடிக்கையின் போது சில பலசரக்கு கடைகளில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் புழுப்பிடித்த கோதுமை மா 46 கிலோகிராம் மற்றும் வண்டு மொய்த்த பருப்பு 20 கிலோகிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கோதுமை மா விநியோகத்தர்கள் பொருளின் தரத்தை உறுதிப்படுத்தி விநியோகம் செய்யுமாறும், சில்லறைக்கு விற்பனை செய்பவர்கள் உணவுப்பொருளின் தரத்தை உறுதி செய்து விற்பனை செய்யுமாறும், குறித்த மாவினை பெற்றுக் கொண்ட சில்லறை கடை உரிமையாளர்கள் மாவின் தரத்தை உறுதி செய்யுமாறும், மனிதநுகர்விற்கு பொருத்தமற்ற மாவினை கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதார பரிசோதகர்கள் இதன்போது அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.








