என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்: தேர்தல் ஆணைக்குழு தலைவர்
உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைத்து மக்களின் ஜனநாயக உரிமைக்கு எவரும் குந்தகம் விளைவிக்கவும் முடியாது, இவற்றை மீறி என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நிதி அமைச்சும், நாடாளுமன்றமும் செயற்படும் என்று நாம் நினைக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல்
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை, நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தனர்.
இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தின் சுயாதீனத்திலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்திலும் ஆளும் கட்சி தலையீடு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரிடம் கொழும்பு ஊடகம்
ஒன்று கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam