உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி நடத்தப்படுவது உகந்ததாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (07.03.2023) கூடியபோது இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் இந்த தகவல் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல்
இதற்கமைய, தபால் மூல வாக்களிப்பு மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 3ஆம் திகதிகளில்
நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்தபோதும், அது பின்னர் திகதியின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த புதிய திகதி தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது