தீர்மானமற்ற நிலையில் உள்ளூராட்சி தேர்தல்! வெளியான தகவல்
இலங்கையின் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் தெளிவற்ற நிலை தோன்றியுள்ளது.
சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேரும் இந்த தேர்தலை நடத்துவதில் இணக்கம் காணவில்லை.
இந்தநிலையில், தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவது தொடர்பில் தம்முடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்
இந்த விடயம் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் சட்டமா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது வெளியானது.
இந்தநிலையில், இந்த தீர்மானத்துக்கு மாற்றீடாக, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்ப்பது என்று முடிவு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்
இதேவேளை தேர்தலை நடத்தவேண்டும் என்று கோரி ஒரு தரப்பினரும், நடத்தக்கூடாது என்று ஒரு தரப்பும் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளன.
இந்த மனு விசாரணையின்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையாக வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டார்.
எனினும் இது தொடர்பான தீர்மானம் நாளை திங்கட்கிழமையே எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் வேட்புமனுக்கள் கோரப்பட்டாலும், தேர்தலை ஒத்திவைக்கமுடியும்
என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
