தேர்தல் அதிகாரிகளுடன் தொடர் கலந்துரையாடல்கள்: ஆணைக்குழு விசேட நடவடிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக,தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்
பாதகமான காலநிலை நிலையிலும் கூட வாக்குப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளன.
மழைக்காலத்தில் தேர்தல் நடத்தப்படலாம், அதனால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பிற பேரழிவுகள் ஏற்படலாம். அத்தகைய நிகழ்வின்போது ஒரு திட்டம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது விவாதத்தின் முக்கிய புள்ளியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை அறிவுறுத்தல்
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குச் சாவடிகள் நடத்துதல், பணியாளர்களை ஏற்றிச் செல்வது, சோதனை மேற்கொள்வது, சொத்து துஸ்பிரயோகம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
தேர்தல்களின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நடைமுறைகளை நினைவூட்டும் வகையில் வழங்கப்படும் வழக்கமான அடிப்படை அறிவுறுத்தல்களே இந்த சந்திப்பின்போது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் கூட்டங்களில் வேட்புமனுக்கள், வெளியிடப்படவுள்ள சுற்றறிக்கைகள், அது தொடர்பான விடயங்கள் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |