நாடாளுமன்றில் உணவு விரயமாவதனை தடுப்பது குறித்து கவனம்!
நாடாளுமன்றில் உணவு விரயமாவதனை தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் உணவு வீண் விரயமாவதனை தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் விரயமாவதனை தடுப்பது தொடர்பில் நாடாளுமன்ற பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என நாடாளுமன்றின் துணை பொதுச் செயலாளர் டிக்கிரி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உணவுப் பொருட்கள் விரயமாவதனால் பாரியளவில் பணம் விரயமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.