சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலத்தை மாற்றியமைப்பது குறித்து கவனம்
க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் காலத்தை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு கொள்கையின் கீழ் இந்த யோசனைத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
மாணவ மாணவியரின் காலம் விரயமாவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு பரீட்சைக் காலத்தை மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டு அடுத்த ஆண்டளவில் இந்த புதிய நேர அட்டவணையின் பிரகாரம் பரீட்சைகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam