கொழும்பில் திரண்ட மக்கள் வெள்ளம் ”ஜனாதிபதி செயலகத்திற்கு சவப்பெட்டி” (VIDEO)
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கொழும்பிற்கு வருகைத்தந்திருந்தனர்.
பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கென நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் 10 வெவ்வேறு பேரணிகளாக கொழும்பிற்கு வருகைதந்த மக்கள், எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் பி.டி.சிறிசேன மைதானம் ஆகிய இரு இடங்களில் ஒன்றுகூடி, பின்னர் அங்கிருந்து காலிமுகத்திடலை நோக்கிச்சென்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஒன்று திரண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக கூடிய மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த எதிர்ப்பு பேரணியில் ஐக்கிய ஊழியர் சங்கம், ஐக்கிய மகளிர் அமைப்பு, சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தை அடைந்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வளாகத்திலிருந்து வெளியே வருமாறு கோரியதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினரால் செயலக வளாகத்துக்கு வெளியே பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள், செயலக வளாகத்திற்குள் போலியான சவப்பெட்டியையும் மலர் மாலையையும் வீசியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்பினை வெளியிட்டதோடு, ஜனாதிபதி செயலகம் முன்பாக பதாகைகளுக்கு தீயிட்டு கொளுத்தியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீதும் தீப்பந்தங்களை வீசி எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில் பதற்றம் அதிகரித்தது. ஸ்ரீலங்கா அமைச்சரவை அமைச்சர்களின் புகைப்படங்களை சுமந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சிலை உமிழ்ந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதன்போது உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, பொதுமக்களின் ஆட்சியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரும் என தெரிவித்தார்.
உங்களால் முடியாதென்றால் நாட்டை எங்களிடம் தந்து விடுங்கள் நாங்கள் செய்து காட்டுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பாரிய கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குறிப்பிட்டார். இதற்கு காரணம் ராஜபக்ச அரசாங்கத்தின் மோசடிகளாகும்.
இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் எனவும், மக்கள் தீர்ப்பை வழங்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பேரணியில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில், வீட்டிற்கு செல்லுமாறு கூறவே மக்கள் அனைவரும் கொழும்பிற்கு வந்துள்ளதாகவும், அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் வரையில் நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஹர்ஷ டி சில்வா கூறுகையில், டொலரொன்றின் விலை 200 ரூபாவாக இருக்கும் போதே இந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம் எனினும் இன்று பிற்பகலாகும் போது டொலரின் விலை 280 ரூபாவாக ஆகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கையில்,
”நீங்கள் செய்தது போதும், வீட்டிற்கு போங்கள்” என்ற விடயத்தை கூறவே இந்த
எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam