வெளிநாடொன்றில் தீவிரமடையும் வெள்ளப்பெருக்கு
நாரா சூறாவளி காரணமாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து தெற்கு சீனாவில் வெள்ளப்பெருக்கு மிக தீவிரமடைந்துள்ளது.
அத்துடன், குடியிருப்புகள் மற்றும் வணிக நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
சீனாவின் குவாங்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள சொங்சுவோ நகரில் 2008 ஆம் ஆண்டு பதிவான அதிகபட்ச வெள்ள நீர்மட்டத்தை விடவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, அங்குள்ள 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனமழை
அத்துடன், குவாங்சி பிராந்தியம் முழுவதிலும் இதுவரை 54,000 க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சீன அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
தென் சீனக் கடலின் பெங்பு வளைகுடாப் பகுதியில் சில நாட்களாக நிலை கொண்டிருந்த நாரா சூறாவளி, ஹாய்னான் தீவுப் பகுதியில் கரையை கடந்துள்ளது.

இதன் காரணமாகக் குவாங்சி, ஹாய்னான் மற்றும் குவாங்டாங் ஆகிய மாகாணங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது.
இதேவேளை, சௌடெல் என்ற பிறிதொரு சூறாவளி ஜப்பானின் தென் பகுதியையும் தாய்வானின் வட பகுதியையும் நோக்கி நகர்ந்து வருவதாகப் வானிலை அவதான நிலையங்கள் எச்சரித்துள்ளன.
ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - அடுத்த மாதம் இடைத்தேர்தல்