விரைவில் நடைமுறைக்கு வரும் மின் ஸ்மார்ட் மீட்டர் - அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் 300,000 ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கமைய, இந்த திட்டத்தை 02 ஆண்டுகளில் மின்சார விநியோக லங்கா பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்படுத்துவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான துணைத் திட்டங்களுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நுண் கடன் வசதி மூலம் 15 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு, கடந்த ஆண்டு 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கோரியுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
இதனைத் தொடர்ந்து, மகா ஓயா நீரேற்று மின் உற்பத்தி நிலையத்தின் அபிவிருத்திக்காக, கடனிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தவும் கடந்த ஆண்டு 03 ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் ஸ்மார்ட் மின்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையான, பயன்பாட்டு நேரக் கட்டண முறையுடன் கூடிய ஸ்மார்ட் மீட்டரிங் அமைப்புகளை நிறுவ, மீதமுள்ள 12.5 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தவும் அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளது.