எதிர்வரும் அக்டோபருக்கு பின் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை
எல் நினோவின் தாக்கம் காரணமாக எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை விடவும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரவுப் பகுப்பாய்வில் வெளியான தகவல்
அடுத்த 6 மாதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சாதாரண ஆண்டின் 30% மழைவீழ்ச்சி இந்த இரண்டு மாதங்களில் கிடைக்கிறது. அப்படியிருக்கும் போது இது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், பலத்த மழை பெய்து குளங்கள் நிரம்பிச் சிலவேளைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

மழை பரவலாகப் பெய்யும்
அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஆகும்போது இலங்கை முழுவதும் மழை பரவலாகப் பெய்யும். பலத்த மழை பெய்யக்கூடும். வெள்ளப்பெருக்கு நிச்சயமாக வரும் என்று கூற முடியாது, எனினும் எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இதேவேளை, டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதிகளில் எல் நினோ நிலைமை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்