ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
தென்கிழக்கு ஸ்பெயினில்(spain) ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ள நிலைமை காரணமாக காணாமல் போனவர்களை மீட்பதற்காக தற்போது பாதுகாப்புப் படையினருக்கு மேலதிகமாக 500 வீரர்களும், பல ஆளில்லா விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நேற்று பிற்பகல் வரை பாதிக்கப்பட்ட 4,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் கடும் அவதி
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்கள் கடந்துள்ள போதும், குறித்த பிரதேசம் இயல்புநிலைக்கு திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் 8 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால் பேரழிவை வலேன்சியா மக்கள் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மக்களை பெருமழை வேறொரு விதமாக பாதிப்படைய வைத்துள்ளது.
இதற்கிடையில் அந்நாட்டின் வலேன்சியா, ஹூல்வா, காஸ்டெலான், மலோர்கா, கேட்டலோனியாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam