தகர்ந்துப்போயுள்ள இஸ்ரேல் - ஹமாஸ் - ஹிஸ்புல்லாஹ் இடையிலான போர் நிறுத்த நம்பிக்கை

Israel Israel-Hamas War Gaza
By Sivaa Mayuri Nov 02, 2024 12:07 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இஸ்ரேல் மற்றும் அதன் எதிரிகளான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சு இடம்பெறும் நிலையில், நேற்று காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இரண்டு முனைகளிலும் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் பணியில் அமெரிக்க தூதர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், ஹமாஸ் தற்காலிக போர்நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்று அதன் அல்-அக்ஸா ஹமாஸ் என்ற தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்கப் போவதில்லை: இஸ்ரேல் அதிரடி

அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்கப் போவதில்லை: இஸ்ரேல் அதிரடி

நெதன்யாகுவின் முன்னுரிமை

காசாவில் ஓராண்டு நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மற்றும் இஸ்ரேலிய படைகளை அங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை போர்நிறுத்த முன்மொழிவுகள் நிறைவேற்றவில்லை என்பதே இதற்கான காரணம் என்று அல் அக்ஸா ஹமாஸ் கூறியுள்ளது.

முன்னதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், எந்தவொரு அழுத்தம் அல்லது கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் பாதுகாப்பை நடைமுறைபடுத்துவதே தனது முன்னுரிமை என்று கூறியிருந்தார்.

தகர்ந்துப்போயுள்ள இஸ்ரேல் - ஹமாஸ் - ஹிஸ்புல்லாஹ் இடையிலான போர் நிறுத்த நம்பிக்கை | Narrow Chances For Israel Hamas Ceasefire

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதர்களான அமோஸ் ஹோச்ஸ்டீன் மற்றும் பிரட் மெக்குர்க் ஆகியோருக்கு அவர் இந்த செய்தியை தெரிவித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையிலேயே, காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இஸ்ரேல் தனது இராணுவ தாக்குதல்களை நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பித்தது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்

இதன்படி, காசாவின் மத்தியப் பகுதியில் உள்ள டெய்ர் அல்-பாலா நகரம், நுசிராத் முகாம் மற்றும் அல்-ஜவேதா நகரம் ஆகியவற்றின் மீது இஸ்ரேலிய தாக்குதல்களில் வெள்ளிக்கிழமை காலை வரை சுமார் 64 பேர் கொல்லப்பட்டனர் என்று காசாவில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகர்ந்துப்போயுள்ள இஸ்ரேல் - ஹமாஸ் - ஹிஸ்புல்லாஹ் இடையிலான போர் நிறுத்த நம்பிக்கை | Narrow Chances For Israel Hamas Ceasefire

அதேநேரம், பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் குறைந்தது 10 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன குறித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு, வெளியேற்ற உத்தரவுகளை வழங்கியதை அடுத்தே, இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அந்தவகையில், நவம்பர் 5இல் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒரு போர்நிறுத்தம் எட்டப்படலாம் என்ற நம்பிக்கை தற்போது தகர்த்துப்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     

உடனே வெளியேறவும்! லெபனானுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

உடனே வெளியேறவும்! லெபனானுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

இஸ்ரேல் - லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

இஸ்ரேல் - லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US