நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை: 15 குடும்பங்கள் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த நிலையில் புத்தளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாராக்குடிவில்லு கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களை சேர்ந்த 20 பேரும், அங்குனவில கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு
மேலும், ஆனமடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சங்கட்டிக்குளம் கிராமத்தில் 6 குடும்பங்களை சேர்ந்த 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை முந்தல் மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் முன்னெடுத்து வருகின்றன.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 16 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
