தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் (Photos)
வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை வீழ்ச்சி தற்போது அதிகரித்துள்ளமையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் இரண்டு இடங்களை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பிரயாணிகளும் பொதுமக்களும், மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதிகரித்த நீர்மட்டம்
இந்நிலையில் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களான உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30அடி 9அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16அடி 6 அங்குலமும், வாகனேரி குளத்தின் நிர்மட்டம் 16அடி 11அங்குலம், கட்டுமுறிவு குளத்தின் நீர்மட்டம் 6அடியும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 5அங்குலமும், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13அடி 6அங்குலமும், புணானை அணைக்கட்டு 4அடி 7அங்குலமும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 16அடி 2அங்குலமும், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 30அடி 2அங்குலமும் அதிகரித்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான பெறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்வான் கிரதேசங்களில் தேங்கியுள்ள மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்கள் குடியிருப்புக்களிலும், வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதாகவும், இதனால் பல தொற்று நோய்களுக்கு தாம் முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் மழை காரணமாக நவகிரிக்குளம் ஒரு வான் கதவு 1 அடி களுவாஞ்சிகுடி நவகிரி நீர்பாசன தினைக்கள பொறியலாளர் கிசோக்காந் ஆலோசனைக்கு அமைவாக திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மட்டக்களப்பு - வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதி ஊடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாகபோக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கிவருகின்றர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
