இலங்கையில் வாகனங்கள் தொடர்பில் கொண்டு வரப்படும் தடை: வெளியான தகவல்
பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத வாகனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களை நசுக்கும் வற் வரி : ஆடம்பர கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுகம் மற்றும் விமான நிலையத்தில் பயன்படுத்துவதற்கும் பந்தயங்களில் பயன்படுத்துவதற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
வருடாந்த புதுப்பிப்பு
தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், வருடாந்தம் 55 இலட்சம் வாகனங்கள் மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன.
வாகன வருமான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கத் தேவையான புகைப் பத்திரங்களைப் பெறுவதன் மூலம் இது உறுதிப்படுத்தப்படும். 21 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் காணாமல் போயுள்ளன.
மாகாண சபைகளின் கீழ் உள்ள மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்து வாகனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு எவ்வளவோ அறிவித்தல்களை வழங்கியும் எந்த மாகாண சபையும் அதனை வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |