நுவரெலியா நகரத்தை மூடிய வெள்ளம்;திட்டமிடப்பட்ட சதித்திட்டமா?
நுவரெலியா நகரத்தில் வரலாற்றில் முதல் தடவையாக ஏற்பட்ட வெள்ளம் வேண்டுமென செய்யப்பட்ட சம்பவமா?அல்லது திட்டமிடப்பட்ட சதியா என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பிரதான வடிகாலமைப்பு

நுவரெலியா பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவான சந்தர்ப்பங்களில் நுவரெலியா நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான வடிகான் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இரு தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு அல்லது திறக்கப்பட்டு மழை நீர் அல்லது வெள்ளம் வெளியேற்றப்படும்.
கிரகரி வாவி
வெளியேற்றப்படும் வெள்ள நீர் கிரகரி வாவிக்கு விடப்படும்.ஆனால் அன்றைய தினம் வடிகாலமைப்பு திணைக்கள அதிகாரிகள் குறித்த தடுப்பு சுவர்களை திறக்கவில்லை. அவர் அதை வேண்டுமென செய்தாரா?அல்லது பொடுபோக்கில் விட்டு விட்டாரா என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆனால் நுவரெலியா நகர சபையின் மேயர் அன்றைய தினம் 12.30 மணிக்கு அந்த இடத்திற்கு சென்று வடிகான் தடுப்பு சுவர்களை திறந்துள்ளார். இதனால் நுவரெலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பாதிப்பு ஏற்படலாம்.
மேலும் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
[