மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை! வெள்ளக்காடான கிராமம்
மத்திய மலைநாட்டில் நிலவிய வறட்சியினை தொடர்ந்து கடந்த சில தினங்களாக மாலை வேளையில் கடும் மழை பெய்து வருகிறது.
நேற்று (21) ஆம் திகதி மாலை டிக்கோயா போடைஸ் பகுதியில் பெய்த கடும் மழையினால் போடைஸ் ஆறு பெருக்கெடுத்து அப்பகுதி வெள்ளக்காடானது இதனால் கொணகல பிரிவில் உள்ள சுமார் 56 மேற்பட்ட குடியிருப்புக்கள் வெள்ள நீரினால் பாதிப்புக்கு உள்ளாகின.
மக்கள் கோரிக்கை
வெள்ளம் காரணமாக போடைஸ் வீதி வெள்ளத்தில் சுமார் ஆறு ஏழு அடி மூழ்கியதனால் பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.

இதனால் போடைஸ்,மண்ராசி, ஊடாக அக்கரபத்தனை,டயகம செல்லும் போது மக்கள் பல மணித்தியாலங்கள் வெள்ளம் வழிதோடும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
குறித்த பகுதி மழை பெய்யும் போதெல்லாம் வெள்ள நீரால் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும் இதனால் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகள் சேதமடைவதாகவும் இது குறித்து பலருக்கு அறிவித்த போதிலும் இது முறையான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் எனவே இதற்கு நிரந்தர தீர்வாக ஆற்றினை அகலப்படுத்துமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


