நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
நாட்டின் பல பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால்,வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ள அபாய எச்சரிக்கை, நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த 3 முதல் 24 மணித்தியாலங்களில் குறித்த பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
