நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் திடீர் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகளில் நீர்மட்டம்
இதேவேளை குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று(3) திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் ஆறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தற்போது வெள்ள அபாயம் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மழை தொடரும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நீர் மட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
