அடுத்த 48 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை
மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான பகுதிகள்
அதன்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.

கிண்ணியா, மூதூர், கந்தளாய் மற்றும் சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பகுதிகள் ஆபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜமகா விஹாரைக்குச் செல்லும் வீதி மற்றும் சோமாவதிய ரஜமகா விஹாரையைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.
எனவே முன்னெச்சரிக்கையாக, சோமாவதி ரஜ மகா விகாரைக்குச் செல்லத் திட்டமிடும் பக்தர்கள் அடுத்த சில நாட்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam