ஓட்டமாவடி பாலத்திற்கு கீழ் மிதந்த? - தேடும் பணிகள் தீவிரம்(Photos)
வாழைச்சேனை - ஓட்டமாவடி பாலத்தின் கீழுள்ள ஆற்றில் இன்று சனிக்கிழமை 3 மணியளவில் சடலமொன்றில் தலை மிதந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடிப் பாலத்தினால் நபரொருவர் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் சடலமொன்றின் தலை மிதந்த நிலையில் காணப்படுவதைக் கண்டுள்ள நிலையில், கிரான் பகுதியில் ஆற்றில் காணாமல் போன மாணவர்களின் சடலமோ என்ற சந்தேகத்தில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நபரின் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன், கல்குடா சுழியோடிகள் இரண்டு படகுகளில் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் மிதந்தது சடலமா? அல்லது ஏதும் கழிவுப் பொருட்களா என பொலிஸார் மற்றும்
சுழியோடிகள் சந்தேகத்தோடு ஆற்றில் பல்வேறு பகுதிகளிலும் தேடிக் கொண்டிருப்பதைக் காண
முடிவதுடன், இதனைக் கேள்வியுற்ற மக்கள் ஓட்டமாவடி பாலத்தில் குவிந்து காணப்படுவதைக்
காணக்கூடியதாக உள்ளது.





ஓவராக பேசிய அறிவுக்கரசி, தூக்கிபோட்டு மிதித்து சம்பவம் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தரமான புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri