அமெரிக்காவில் பனிப்புயல்: 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து
அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல வீதிகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
மக்கள் உயிரிழப்பு
டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை பனி, பனிக்கட்டி மற்றும் உறைபனி மழை ஆகியவை “உயிருக்கு ஆபத்தான” நிலைமைகளை உருவாக்கி வருவதாகவும், இது பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனவும் அந்நாட்டின் தேசிய வானிலை சேவை (NWS) அறிவித்துள்ளது.

மேலும், லூசியானாவில் குறைந்தது இரண்டு பேர் தாழ்வெப்பநிலை (Hypothermia) காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் மரணங்கள் புயலுடன் தொடர்புடையவை என மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மேலும் டெக்சாஸில் மற்றொரு மரணம் பதிவாகியுள்ளது.
விமானத்தடை
நேற்று (25.01.2026) பிற்பகல் நிலவரப்படி, 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

இதற்கிடையில், 10,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரவலான கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை ஆகியவற்றால் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களான சுமார் 180 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.