கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்ட இரு மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் - அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
கனடாவில் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இந்தியா - தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கனடாவில் கடந்த 18 ஆம் திகதி அதிகாலை ரெஜினாவில் இருந்து கார்லைல் வழியாக ஸ்டெய்ன்பாக், மனிடோபா வரை இரவு நேர பயிற்சியை மேற்கொண்ட போது சஸ்காட்சுவான் அருகே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரண்டு தமிழக மாணவர்கள் உயிரிழப்பு
இதன்போது, விமானத்தில் பயணம் செய்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்துள்ள மாணவர்கள் இந்தியாவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரன் திருஞானசம்பந்தம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக கனடாவுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், இந்தக் கடினமான சூழலில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு துணை நிற்கிறோம் என்றும், இருவரின் உடல்களும் இந்தியா கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்துக்கு பயந்து நேபாளத்தில் அகதியாக கஷ்டப்படும் கட்சித் தலைவர்! தனக்கு நேர்ந்த கொடுமைகளை பகிரங்கப்படுத்தினார்...
YOU MAY LIKE THIS VIDEO..