போக்குவரத்து பொலிஸார் செய்த நெகிழ்ச்சியான செயல்! (Video)
பொலன்னறுவை பெதிவெவ வீதியின் ஊடாக சுகயீனமுற்ற குழந்தை ஒன்று நேற்று (5 ) மாலை முச்சக்கரவண்டியில் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந் நிலையில் அப்பாதையில் மோட்டார்சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பொலன்னறுவை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் இரண்டு உத்தியோகத்தர்கள் அவதானித்து உடனே செயற்பட்டு வீதியில் வாகனங்களை விலக்கி குறித்த முச்சக்கரவண்டியை விரைவாக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவி செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் பெதிவெவ பாதையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் கமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகளவானோரினால் பார்க்கப்படுவதுடன், உடன் செயற்பட்டு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.