பிரித்தானியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட ஐந்து வயது சிறுவன்!!
பிரித்தானியாவில் ஐந்து வயதான சிறுவனை கொலை செய்து அவரது உடலை ஆற்றில் வீசியதற்காக தாய், மாற்றாந்தந்தை மற்றும் சகோதரன் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 40 வயதான ஜோன் கோல் குறைந்தபட்சம் 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் சிறுவனின் தாய் 31 வயதான அங்கரட் வில்லியம்சன் குறைந்தது 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கொலை சம்பவத்தின் முக்கிய உடந்தையாக இருந்து ஜோன் கோலின் 14 வயது மகன் கிரேக் முல்லிகன் (Craig Mulligan) என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸில் உள்ள சர்னில் உள்ள ஓக்மோர் நதியில் அதிவேக கார் விபத்தில் ஏற்பட்ட காயங்களுடன் 5 வயது சிறுவனான லோகன் முவாங்கி (Logan Mwangi) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
எனினும், பின்னர் இது திட்டமிட்ட கொலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தாய், மாற்றாந்தந்தை மற்றும் 14 வயதான கிரேக் முல்லிகன் ஆகியோரே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டனர். எவ்வாறாயினும், வயது காரணமாக கிரேக் முல்லிகன் தொடர்பாக விபரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில், வயது காரணமாக சிறுவனின் விவரங்கள் வெளியிடப்படக்கூடாது என்பதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியது. இதன்படி முல்லிகன் கோலின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த மூவருக்கும் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.