கந்தளாயில் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கல்
நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு இன்று நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கந்தளாய் பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரியின் தலைமையில் பேராறு பகுதியில் வழங்கப்பட்டு வருகின்றது.
கந்தளாய், மத்ரஸா நகர், பேராற்றுவெளி மற்றும் அணைக்கட்டு போன்ற பகுதிகளில் பயணத்தடை காரணமாக ஒவ்வொரு வீடுகளாக சென்று கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.
இதை சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி திட்ட முகாமையாளர், சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் உதவி முகாமையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் முக கவசங்களை அணிந்து சம இடைவெளிகளை பேணி கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டனர்.


90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam