பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த ஐந்து புதிய நாடுகள்: புடின் வெளியிட்டுள்ள திட்டம்
பிரிக்ஸ் அமைப்பில் ஐந்து புதிய உறுப்பு நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கத்துவம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொருப்பை வகிக்கும் நாடான ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ளன.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பாகிஸ்தான் குற்றச்சாட்டு
பிரிக்ஸ் என்பது உலகின் வளரும் நாடுகளின் குழுவாகும். இதுவரை இந்தியா, ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மட்டுமே பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராவதை இந்தியா அனுமதிக்கவில்லை என்றும், சீனா தனக்கு உறுப்புரிமையை பெற விரும்புவதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
இந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக ரஷ்யா காணப்படுகிறது. இதனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
புடினின் கருத்து
இந்நிலையில், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது, இந்த ஐந்து நாடுகளையும் பிரிக்ஸ் அமைப்பில் சேர்க்க முறையான ஒப்பந்தம் ஏற்பட்டது.
மேலும், ஆர்ஜென்டினாவும் பிரிக்ஸ் அமைப்பில் சேர ஆர்வம் காட்டியது. எனினும் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, ஆர்ஜென்டினா ஒரு இடைவெளியைக் கடைப்பிடித்தது.
இதற்கமைய பிரிக்ஸ் அமைப்பின் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆதரவாளர்கள் மற்றும் நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புடின் கூறியுள்ளார்.
இதன்படி ரஷ்யாவின் 2024 BRICS தலைவர் பொறுப்பு அனைத்து நாடுகளுடனும் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று புடின் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |