பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை: தொடரும் கைதுகள்
பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொலைகளுக்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியதற்காகவும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் புஸ்ஸ ஆகிய பகுதிகளை சேர்ந்த 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹூங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அன்றைய தினம் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலும் ஒரு சந்தேக நபரை மாத்தறையில் வைத்து கைது செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், கொலைகளுக்காக துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக முன்னதாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri