அம்பாறை பகுதியில் 5 கைக்குண்டுகள் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை நேற்று(20.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட 5 மோட்டார் குண்டுகளும் மண்ணுக்குள் புதைந்த நிலையில், துருப்பிடித்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன்.. யாழ். பல்கலை விரிவுரையாளர் முன்வைத்த குற்றச்சாட்டு
5 மோட்டார் குண்டுகள்
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ள இந்த குண்டுகள் கடந்த யுத்த காலத்தில் பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த காலத்தில் குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக காணப்பட்டதுடன், அங்கிருந்து இராணுவ முகாம்களை நோக்கி மோட்டார் செல் குண்டுகள் ஏவப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது மீட்க்கப்பட்டுள்ள குண்டுகள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படை பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.