அம்பாறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு தொற்று உறுதி
அம்பாறை -காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையில்
பணியாற்றிய ஒருவருக்கு நேற்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டத்தை அடுத்து,
இன்று அவரது குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரின் மனைவி,
பிள்ளைகள் அடங்கிய நால்வருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த சுமார் 52 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மரண வீடுகளில் அவசரமாகச் சடங்குகளை முடிக்க வேண்டும்
என்றும், தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அல்லது கோவிட் தொடர்பான அச்சம்
இருந்தால் உடனடியாக எங்களைத் தொடர்புகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும்
கேட்டுக்கொண்டுள்ளார்.


