எல்லையைத் தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

Indian fishermen Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Jenitha Jul 04, 2022 04:34 PM GMT
Report

சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகுகள் மீட்பு

எல்லையைத் தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய கடற்தொழிலாளர்கள் கைது | Five Indian Fishermen Arrested Sri Lanka Navy

TN 06 mm 477 எண் கொண்ட விசைப்படகில் கோடியாக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஐந்து கடற்றொழிலார்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய படகும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐந்து இந்நிய கடற்றொழிலாளர்களையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கடல் வளத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சபையில் டக்ளஸிடம் தயாசிறி கேள்வி 

கடற்றொழில் நீரியல் வள திணைக்களம்

எல்லையைத் தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய கடற்தொழிலாளர்கள் கைது | Five Indian Fishermen Arrested Sri Lanka Navy

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் நாளைய தினம் மயிலட்டி கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த இரண்டு நாட்களில் 17 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்: தீபன் 

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US