வடக்கு கடல் வளத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சபையில் டக்ளஸிடம் தயாசிறி கேள்வி
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்படையினருக்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட முடியாதுள்ளது. இந்நிலையில் வடக்கு கடற்பரப்பை இந்திய மீனவர்கள் ஆக்கிரமிக்கின்றனர்.
எனவே, எமது கடல் வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எரிபொருள் பிரச்சினையால் கடற்றொழிலாளர்களுக்குத் தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர எம்.பி. இதன்போது வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர்,
"இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
'இந்திய கடற்றொழிலாளர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து வடக்கு கடல் வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா?' என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் இன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் என்பது இன்று நேற்று நடைபெறும் விடயமல்ல. நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. இதனைத் தடுப்பதற்கு இலங்கைக் கடற்படையினர் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்றுக்கூட அத்துமீறிய 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும். அதேவேளை, எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri