வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் கைது
கோப்பாய் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் இன்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள்களான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
கைது நடவடிக்கை

கோப்பாய் செல்வபுரம் பகுதியில் 4 கிராம் 200 மில்லிக்கிராமுடம் அதே இடத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ஊரெழு முருகன் கோவிலடியைச் சேர்ந்த நான்கு வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 26 வயதுடைய ஒருவரிடம் 2 கிராம் 300 மில்லிக்கிராம் ஹெரோயின், மற்றொருவரிடம் 96 போதை மாத்திரைகள், ஏனைய இருவரும் 15 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கருத்து

“சந்தேகநபர்கள் ஐவரும் தினமும் போதைப்பொருள் வியாபாரத்தினால் இலட்சம் ரூபாய் பணம் சம்பாதிப்பவர்கள். அவர் கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினரிடம் பேசி தம்மை விடுவிக்க முற்பட்டுள்ளனர்”என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஐவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்
முற்படுத்தப்படவுள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri