போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும்: எம்.கே சிவாஜிலிங்கம்
அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படல்

மேலும் தெரிவிக்கையில்,“போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது அதிகரித்து காணப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்த அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும். விழிப்புக்குழுக்களை உருவாக்கி செயற்பட வேண்டும்.
சிங்கள பேரினவாதத்தின் முயற்சி
பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக இருந்தும் போதைப்பொருள் பாவனையை தடுக்க முடியாதுள்ளது. எங்களை சீரழிக்க சிங்கள பேரினவாதம் முயற்சிக்கிறது. இதனை அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும்.
மேலும், எங்களை சீனா பகடைக்காயாக்க முயற்சிக்க வேண்டாம். குழம்பிய குட்டையில் சீனா மீன்பிடிக்ககூடாது.
சீனத் தூதரகத்திடம் பெற்ற உதவி தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரின் கருத்து வேடிக்கையானது.”என கூறியுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri