கெஹலியவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது
முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை பதவி விலகுமாறு (கெஹலிய கோ ஹோம்) வலியுறுத்திய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் நடைபெற்ற தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான விசாரணையில் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு
இலஞ்சம், ஊழல், வீண்விரயம் மற்றும் மக்கள் அமைப்புகளுக்கு எதிரான பிரஜை சக்தி அமைப்பு ஒன்று இணைந்து நேற்று (31) கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முன்பாக 'கெஹலிய கோ ஹோம்' என்ற பதாகைகளுடன் அமைதியான சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.
இதற்கிடையே கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |