கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான இலஞ்ச வழக்கை இன்று மேல்நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவரது உத்தியோகபூர்வ தொலைபேசியை அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி உபயோகித்து இருந்ததுடன், அதற்காக இரண்டு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபாவை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் மூலமாக செலுத்த வைத்து, ஊழல் மேற்கொண்டதாக கெஹலியவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கெஹலிய தரப்பின் வாதம்
அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்தவுக்கு எதிராகவும் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த வழக்கை இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு நடத்த முடியாது என்று கெஹலிய தரப்பில் வாதிடப்பட்டது.
அதனையடுத்து இது தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றத்தின் கருத்தை அறிவிப்பதாக மேல்நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |