புத்தளத்தில் புதையல் தோண்ட முயற்சித்த ஐவர் கைது
புத்தளத்தில் (Puttalam) விளக்கு பற்றி பூஜை செய்து புதையல் தோண்ட முயற்சித்த ஐந்து பேர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் கருவலகஸ்வெவ நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபர்கள் விளக்கு ஏற்றி பூஜை செய்த பின்னர் புதையல் எடுப்பதற்கு தோண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, அலவாங்கு மற்றும் பூஜைக்கு பயன்படுத்திய விளக்கு மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவை கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri