ஞானசார தேரருக்காக முஸ்லிம் சமூகத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஞானசார தேரர் செய்த தவறுக்காக நீதிமன்றில் மன்னிப்பு கோரி, பின்னர் நாட்டின் நல்லிணக்கத்திற்காக பாடுபடுவது குறித்து ஆலோசித்து அவருக்கு விடுதலை வழங்க தலையிடுமாறு முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம் மத மற்றும் அரசியல் தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாக சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறைத்தண்டனை
கலகொட அத்தே ஞானசார தேரர் 2016ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட குற்றத்திற்காக நான்கு வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாக ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

அல்லாஹ் தொடர்பில் தேரர் தெரிவித்த கருத்து குறித்து றிசாத் பதியுதீன், அசாத் சாலி, முஜிபர் ரஹ்மான் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த தண்டனை கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த கோவிட் தொற்றுநோய்களின் போது இறந்த உடல்களை தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டது.
உரிமைக்காக குரல் கொடுத்த ஒரே பிக்கு
அதனை எதிர்த்து முஸ்லிம் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒரே பிக்கு ஞானசார தேரரே என்றும், அவர் முஸ்லிம் மக்களின் அடக்க உரிமைக்காகவும் உண்மைகளை முன்வைத்து நின்றார் எனவும் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் பின்னர் ஞானசார தேரர் அவ்வாறான தவறை செய்யவில்லை எனவும், 5-6 வருடங்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞானசார தேரர் தன்னை திருத்திக் கொண்டு சமூகத்திற்கு பெரும் சேவையை ஆற்ற முடியும். அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan